ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தாம்பத்யம்

சிந்தனை சீரடையும்
உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.
ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.

சோர்வு நீங்கும்
நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது

.
மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை உடலுறவு சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்" அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இளமை கூடும்
கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும். ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.

வாரம் இருமுறை தேவை
உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் - ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.

கணவன் - மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.

நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தாம்பத்யம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தாம்பத்யம் Reviewed by Unknown on 4:49 AM Rating: 5

No comments:

Powered by Blogger.