தர்பூசணிப் பழம்


கோடைக்காலத்தில் அதிகமாக விற்கப்படும் தர்ப்பூசணி கோடைக் கனி என்றும் கூறப்படும். தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது இவைகள் சிவந்த நிறத்தில் மட்டுமல்லாமல் வெண்மையாகவும் கூட காணப்படும். நிறம் எதுவாயினும் இதை உண்ணலாம். சில இனிப்பாகயிருக்கும். சில ருசியே இல்லாமல் சப் பென்றும் இருக்கும்.


இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு.

உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
தர்பூசணிப் பழம் தர்பூசணிப் பழம் Reviewed by Unknown on 4:45 AM Rating: 5

No comments:

Powered by Blogger.